இளையான்குடி அருகே ஓடும் பஸ்சிலிருந்து கீழே விழுந்து பயணி சாவு
தலையில் பலத்த காயமடைந்த இவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.


சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே ஓடும் பஸ்சிலிருந்து கீழே விழுந்து பயணி உயிரிழந்தார்.
இளையான்குடி அருகே பெரியகண்ணனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மலைச்சாமி(36) இவர் கடந்த சனிக்கிழமை தனது கிராமத்திலிருந்து மஞ்சூர் கிராமத்துக்கு பஸ்சில் சென்றார். பொட்டகவயல் விலக்கு என்ற இடத்தில் சென்றபோது பஸ் படிக்கட்டில் நின்று கொண்டு வந்த மலைச்சாமி தடுமாறி பஸ்சிலிருந்து கீழே விழுந்தார்.
தலையில் பலத்த காயமடைந்த இவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து சம்பவம் குறித்து இளையான்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...